பிரபல மலையாள கவிஞர் பிரபா வர்மா 2023 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க சரஸ்வதி சம்மான் இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையான 1:1000 என்ற விகிதத்தை விட முன்னேறி, 1:900 என்ற மருத்துவர் மற்றும் மக்கள்தொகை இடையேயான விகிதத்தினை இந்தியா அடைந்துள்ளது.
இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் எரிசக்தி, முக்கிய கனிமங்கள், தொழில் நுட்பம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு மீதான தங்களது முதலாவது '2+2' பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக ஸ்ரீநரில் முதலாவது பார்முலா 4 கார் பந்தய செயல் விளக்க நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
3F ஆயில் பாம் நிறுவனத்தினால் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த செம்பனை எண்ணெய் (பாமாயில்) செயலாக்க ஆலை ஆனது அருணாச்சலப் பிரதேசத்தில் தனது வணிக நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
வாகன் கெதிங் வேல்ஸ் நாட்டின் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஐக்கியப் பேரரசில் ஓர் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்ற முதல் கறுப்பினத் தலைவர் என்ற பெருமையினை அவர் பெற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையானது மார்ச் 15 ஆம் தேதியினை இஸ்லாமியத்திற்கு எதிரான மனப்பாங்கினை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாக அனுசரிக்கிறது.
இது "முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறை ஆகியவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை மேற்கொள்வதை" முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.