மேம்பாட்டு வங்கியான இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியானது, அவானா நிலைத்தன்மை நிதி (ASF) எனப்படும் 120 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அதன் முதல் தொகுப்பு நிதித் திட்டத்திற்கு என்று பசுமை பருவநிலை நிதியத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.
‘சோமா: தி ஆயுர்வேத கிச்சன்’ எனப்படுகின்ற இந்தியாவின் முதல் ஆயுர்வேத சிற்றுண்டியகம் ஆனது, டெல்லி மகரிஷி ஆயுர்வேத மருத்துவமனையில் திறக்கப் பட்டுள்ளது.
நேபாளப் பிரதமர் பிரசந்தா அவர்கள், பொக்காரா நகரினை "நேபாளத்தின் சுற்றுலாத் தலைநகராக" அறிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனமானது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலின் போது அதன் இணைய தளங்களில் பரவும் தவறான பொய்த் தகவல்களைக் கட்டுப்படுத்தவும், வாக்காளர் குறுக்கீடுகளை அகற்றவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நன்கு அதிகரிக்கவும் ஒரு 'விரிவான அணுகுமுறையை' அறிமுகப்படுத்தியுள்ளது.