TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 31 , 2024 110 days 241 0
  • இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆனது உலகின் வலுவான காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
    • அதனைத் தொடர்ந்து தைவான் நாட்டில் அமைந்துள்ள NRMA காப்பீட்டு நிறுவனம், ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள கேத்தே என்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • சிங்கப்பூர் நாட்டின் "டாலி" என்ற கொள்கலன் (சரக்கு) கப்பல் ஆனது அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கே பாலத்தின் தூண்களுள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
  • இராமகிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் சுவாமி ஸ்மரனாநந்தா சமீபத்தில் காலம் ஆனார்.
    • அவர் 2017 ஆம் ஆண்டில் அவ்வியக்கத்தின் 16வது தலைவராகப் பொறுப்பேற்றார்.
  • சர்வதேச திருநர்கள் குறித்த தெளிவான பார்வை என்ற தினமானது (Trans Day of Visibility) ஆண்டுதோறும் மார்ச் 31 ஆம் தேதியன்று, திருநர்களைக் கொண்டாடுவதற்காகவும், உலகளவில் உள்ள திருநர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்