TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 2 , 2024 236 days 399 0
  • இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியப் பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் ஆகியவை 2023-24 ஆம் நிதியாண்டிற்கான உள்நாட்டின் அமைப்பு ரீதியிலான முக்கியக் காப்பீட்டு நிறுவனங்களாக (Domestic Systemically Important Insurers D-Slls) தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • புனிதக் குறியீடான 'ஓம்' வடிவில் வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் கோவில் ஆனது தற்போது ராஜஸ்தானின் பாலி நகரில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
  • இந்திய-பிரிட்டிஷ் பத்திரிகையாளரும் விமர்சகருமான மதுமிதா முர்கியா எழுதிய “Code Dependent: Living in the Shadow of AI” என்ற புத்தகமானது 2024 ஆம் ஆண்டிற்கான புனைவு கதை அல்லாத புத்தகத்திற்கான மகளிர் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
    • இந்தப் புத்தகம் ஆனது மனித சமுதாயத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து ஆராய்கிறது.
  • கமல் கிஷோர், ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தின் (UNDRR) உதவித் தலைமை செயலாளராகவும், பேரிடர் அபாயக் குறைப்பிற்கான பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் இந்தியாவின் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உயர் அதிகாரி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்