இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியப் பொதுக் காப்பீட்டு நிறுவனம் மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் ஆகியவை 2023-24 ஆம் நிதியாண்டிற்கான உள்நாட்டின் அமைப்பு ரீதியிலான முக்கியக் காப்பீட்டு நிறுவனங்களாக (Domestic Systemically Important Insurers D-Slls) தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
புனிதக் குறியீடான 'ஓம்' வடிவில் வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் கோவில் ஆனது தற்போது ராஜஸ்தானின் பாலி நகரில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இந்திய-பிரிட்டிஷ் பத்திரிகையாளரும் விமர்சகருமான மதுமிதா முர்கியா எழுதிய “Code Dependent: Living in the Shadow of AI” என்ற புத்தகமானது 2024 ஆம் ஆண்டிற்கான புனைவு கதை அல்லாத புத்தகத்திற்கான மகளிர் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
இந்தப் புத்தகம் ஆனது மனித சமுதாயத்தில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்து ஆராய்கிறது.
கமல் கிஷோர், ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தின் (UNDRR) உதவித் தலைமை செயலாளராகவும், பேரிடர் அபாயக் குறைப்பிற்கான பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தியாவின் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உயர் அதிகாரி ஆவார்.