2024 ஆம் ஆண்டிற்கான ரொமைன் ரோலண்ட் புத்தகப் பரிசானது பங்கஜ் குமார் சாட்டர்ஜியின் 'ஸ்டாலினர் திவான்' என்ற வங்காள மொழிபெயர்ப்பு நூலிற்கு வழங்கப் பட்டுள்ளது.
மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் அமைப்பின் (IEEE) கேரளா பிரிவானது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவரான S. சோமநாத் அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான K.P.P. நம்பியார் விருது வழங்கி கௌரவித்து உள்ளது.
சுனில் பார்தி மிட்டல் பிரிட்டன் நாட்டு மன்னர் கையால் கெளரவ வீரத் திருமகன் பட்டத்தினைப் பெற்ற முதல் இந்திய குடிமகன் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
அதானி குழுமம் ஆனது, சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து மற்றும் ஆயுத ஏவுகணை வளாகத்தினைச் சமீபத்தில் திறந்து வைத்துள்ளது.
BioAsia எனப்படும் ஆசியாவின் முதன்மையான உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உயிர் அறிவியல் மாநாடானது (21வது) ஹைதராபாத் மாநிலத்தில் நடைபெற்றது.
நடப்பு ஆண்டு உச்சி மாநாட்டின் கருத்துரு, "தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றினைக் கொண்டு உயிர் அறிவியலை மாற்றியமைத்தல்" என்பதாகும்.
க்ருத்ரிம் என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) புத்தொழில் நிறுவனமானது, அதன் beta version AI (பகுதியளவு நிறைவு செய்யப்பட்ட சோதனை பயன்பாட்டிற்கான) உரையாடு மென்பொருளினை அறிமுகப்படுத்தியுள்ளது.