வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரியானது ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் நிறுவப்படவுள்ளது.
அந்தமான் & நிக்கோபர் படைப் பிரிவானது, தனது முதலாவது அனைத்து மகளிர் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கையினை INS உட்கோர்ஷ் என்ற கடற்படை விமான நிலையத்தில் மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையானது, படைத்தளபதி சுபாங்கி ஸ்வரூப், துணைப் படைத் தளபதி திவ்யா சர்மா மற்றும் துணைப் படைத்தளபதி வைஷாலி மிஸ்ரா ஆகிய கடற்படை அதிகாரிகள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியக் கடற்படையின் INS டிர் கப்பலானது, செய்ஷல்சில் நடைபெற்ற கட்லாஸ் எக்ஸ்பிரஸ் - 2024 என்ற பயிற்சியில் பங்கேற்றது.
டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனமானது, சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கான் என்னுமிடத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்தியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி மற்றும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மையத்தின் பணிகளை நிறைவு செய்துள்ளது.
இது 100 மெகாவாட் சூரியசக்தி ஒளி மின்னழுத்த தொழில்நுட்பம் சார்ந்த மின் உற்பத்தி நிலையம் மற்றும் சுமார் 120 மெகாவாட் திறன் கொண்ட பயன்பாட்டு அளவிலான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.