TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 8 , 2024 102 days 167 0
  • ஒடிசா அரசிற்குச் சொந்தமான பாரதீப் துறைமுகம், 2024 ஆம் நிதியாண்டில் 145.38 மில்லியன் டன் சரக்கைக் கையாண்டதன் மூலம், சரக்குப் பொருட்களின் அளவுகளின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரியத் துறைமுகமாக உருவெடுத்து குஜராத்தில் உள்ள தீன்தயாள் துறைமுக வாரியத்தினைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
  • உலகின் மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற வெனிசுலா நாட்டினைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (114) என்பவர் சமீபத்தில் காலமானார்.
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான (56வது) தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரா அணி வெற்றி பெற்றுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களின் நிலை குறித்த ஆணையம் (CSW) ஆனது, 2025 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனது 69வது கூட்டத்திற்குத் தலைமை ஏற்பதற்கு சவுதி அரேபியாவை ஒரு மனதாக நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்