TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 9 , 2024 229 days 407 0
  • டெல்லி பல்கலைக்கழகத்தின் காளிந்தி கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் மீனா சரண்டாவிற்கு 2024 ஆம் ஆண்டிற்கான 'சர்வதேசக் கலாச்சார விருது' வழங்கப்பட்டு உள்ளது.
  • அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமானது, 10000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைத் தாண்டிய இந்தியாவின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது.
  • ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த பில்கிஸ் மிர், இந்த ஆண்டு பாரீஸ் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் நடுவர் உறுப்பினராக இந்தியாவினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற உள்ளார்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி எதிர்கால ஆற்றல் நிறுவனமான PJSC- மஸ்தர், ஆனது உலகளாவிய எதிர்கால ஆற்றல் உச்சிமாநாடு (WFES) நடத்தத் தயாராகி வருகிறது.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, IWF உலகக் கோப்பை போட்டியின் மகளிர் 49 கிலோகிராம் எடையினருக்கான B பிரிவில் மூன்றாவது இடத்தைப் பெற்றதையடுத்து 2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
  • மைக்ரோசாப்ட் மற்றும் ஓபன்AI ஆகியவை இணைந்து "ஸ்டார்கேட்" என்ற செயற்கை நுண்ணறிவு மீக்கணினியினை உருவாக்கி வருகின்றன.
  • முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட IRAH எனப் படும் இந்திய அறிவியல் புனைகதை சார்ந்த விறுவிறுப்பான இந்தி-மொழி திரைப் படம் ஆனது சமீபத்தில் வெளியானது.
  • இந்தியாவின் முதல் சிறிய அளவிலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (SSLNG) உற்பத்தி அலகு ஆனது சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கெயில் இந்தியா நிறுவனத்தின் விஜயப்பூர் வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்திய விமானப்படையானது அதன் செயல் திறன்களையும், அதி முக்கியத்துவம் கொண்ட நடவடிக்கைகளுக்கான ஒரு தயார்நிலையையும் பரிசோதிப்பதற்காக 10 நாட்கள் அளவிலான ‘ககன் சக்தி-2024’ என்ற பயிற்சியை உத்தரப் பிரதேசத்தில் மேற் கொண்டு வருகிறது.
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள பாரத் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (BALCO) நிறுவனமானது, அலுமினியம் செயல்பாட்டு முன்னெடுப்பு (ASI) செயல்திறன் தரநிலை V3 சான்றிதழைப் பெற்ற முதல் இந்திய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்