TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 10 , 2024 100 days 184 0
  • கத்தியா கெஹு (கோதுமை) என்று பிரபலமாக அறியப்படும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியின் உள்நாட்டுப் பண்ணை உற்பத்தி வகை கோதுமைக்கு மதிப்பு மிக்க புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்புச் சபையின் செயலாளர்களின் 19வது கூட்டம் ஆனது கஜகஸ்தானின் ஆஸ்தானா நகரில் நடைபெற்றது.
  • நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஹியூம் நிறுவனம் ஆனது, ‘மனவெழுச்சி நுண்ணறிவுடன் கூடிய முதல் உரையாடும் வகையிலான செயற்கை நுண்ணறிவினை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள REC லிமிடெட் நிறுவனம் ஆனது, 'புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நிதியளித்தல்' பிரிவில் 2024 ஆம் ஆண்டிற்கான SKOCH ESG விருதை வென்று உள்ளது.
  • டாக்டர் கார்த்திக் கொம்முரி பற்சீரமைப்பியல் மற்றும் தாடை வலி ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற புகழ்பெற்ற வெளிநாடுவாழ் பல்மருத்துவ நிபுணர் எனும் மதிப்பு மிக்க தேசியப் புகழ் விருதை பெற்றுள்ளார்.
  • சர்வதேச எரிசக்தி முகமை (IAEA) மற்றும் பெல்ஜியம் அரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த முதல் அணுசக்தி உச்சி மாநாடானது பிரஸ்ஸல்ஸ் என்ற நகரில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்