TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 22 , 2018 2290 days 757 0
  • சென்னையில் இந்து நாடகத் திருவிழாவின் 14வது பதிப்பின் துவக்கத்தில் பெயரிடப்படாதது - 1 என்ற நாடகத்திற்காக அன்னி ஜெயிடிக்கு சிறந்த நாடக ஆசிரியர் விருது 2018 வழங்கப்பட்டது.
    • இந்த விருதானது ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசினை உடையது. இந்த விழாவின் முதன்மை ஆதரவாளர் எஸ் வங்கி (Yes Bank) ஆகும்.
  • மின் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (APTEL- Appellate Tribunal for Electricity) தலைவராக நீதிபதி மஞ்சுளா செல்லூர் மின்சக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்.
    • இவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஆவார்.
  • இங்கிலாந்து மட்டைப் பந்தாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் லார்ட்ஸி-ல் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராகியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 3 தனித்தனி இடங்களில் 100க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் முத்தையா முரளிதரனையடுத்து ஒரே இடத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் இவரேயாவார்.
  • திரைப்பட நடிகர் அக்சய் குமார் இந்திய அரசாங்கத்திற்கான சிறப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். “சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு” என்ற இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பில் பொது விழிப்புணர்வை உருவாக்க அக்சய் நடித்த 3 குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
  • 2018ஆம் ஆண்டில் 72வது சுதந்திர தினத்தில் தெலுங்கானா அரசாங்கம் கண் பராமரிப்பு திட்டமான ‘கண்டி வெலுகு’ (கண் ஒளி) என்ற திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச கண் பரிசோதனை, மருந்துகள், கண்ணாடிகள் மற்றும் அறுவை சிகிச்சை போன்ற கண் பராமரிப்புகளை வழங்குகிறது. இத்திட்டமானது7 கோடி மக்களை உள்ளடக்குகிறது.
  • ஆகஸ்ட் 13ம் தேதி உலக உறுப்பு நன்கொடை தினம் (WODD - World Organ Donation Day) ஆனது ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தங்கள் விலைமதிப்பற்ற உறுப்புகளை தானம் செய்வதை ஊக்குவிக்க அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்