TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 12 , 2024 98 days 133 0
  • இந்திய கடலோரக் காவல்படையானது, தமிழ்நாடு மாநிலத்தின் இராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள மண்டபம் பகுதியில் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மதிப்பாய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் மையத்தைத் திறந்து வைத்துள்ளது.
  • இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை, கடல்சார் காவல்துறை, மீன்வளத் துறை, சுங்கத் துறை மற்றும் இதரப் பாதுகாப்பு அமைப்புகள் ஆனது சாகர் கவாச் எனப்படும் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
  • மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மிராஜ் என்ற சிறிய நகரத்தின் சித்தார் மற்றும் தம்புரா ஆகிய இசைக்கருவிகளுக்கு, புகழ்பெற்ற புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளன.
  • C-DOT மற்றும் காரக்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை ‘10-ஜிகாபிட் திறன் கொண்ட சமச்சீரான செயல்பாட்டு ஒளியிழை வலையமைப்பு (அதாவது, XGS-PON) ஒளியிழை கம்பி முனையம் (OLT) மற்றும் ஒளியிழை வலை அமைப்பு அலகு (ONU) ஆகியவற்றிற்கான பல்வேறு முன்மாதிரிகளை உருவாக்கச் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • நாசாவின் செவ்வாய்க் கிரகத்தின் எந்திர ஹெலிகாப்டரான இங்ஜெனியூட்டி, மூன்று ஆண்டுகளில் டஜன் கணக்கான முறை விண்வெளியில் பறந்த பிறகு மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பியுள்ளது.
    • வேறொரு உலகில் ஆற்றலூட்டப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பறக்கும் நிலையை அடையும் முதல் வாகனம் இதுவாகும்.
  • புகழ்பெற்ற எழுத்தாளர் சாம் பிட்ரோடா ‘The Idea of Democracy’ என்ற தலைப்பிலான புதிய புத்தகத்தினை எழுதியுள்ளார்.
    • இது ஜனநாயகத்தின் தற்போதைய நிலை மற்றும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதன் சாத்தியமான சவால்கள் குறித்து ஆராய்கிறது.
  • GAIL (இந்தியா) லிமிடெட் நிறுவனமானது, 'சிறந்த கட்டுமானத் திட்டங்களுக்கான சாதனை விருது' பிரிவில் மதிப்புமிக்க 15வது CIDC விஸ்வகர்மா விருதினைப் பெற்று உள்ளது.
    • பரௌனி – கௌஹாத்தி இயற்கை எரிவாயு குழாய் அமைப்புத் திட்டத்தில் (BGPL) அதன் குறிப்பிடத்தக்கச் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்