பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறு வணிக கடன்கள் ஆனது 2024 ஆம் நிதி ஆண்டில் அதிகரித்து ஒரு புதிய சாதனை அளவினை எட்டியுள்ளதோடு, 5 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவினையும் கடந்தது.
இந்திய மூலதனச் சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் பங்குச்சந்தை மற்றும் பரிமாற்ற ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) ஆனது அதன் தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளுக்காக ISO/IEC 27001:2022 என்ற தரச் சான்றிதழைப் பெற்று உள்ளது.
ரஷ்ய நாட்டின் மறைந்த எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி மற்றும் அவரது மனைவி யூலியா ஆகியோருக்கு "ஊடக சுதந்திரப் பரிசு" வழங்கப்பட உள்ளது.
'ஹார்டெஸ்ட் கீசர்' என்று அழைக்கப்படும் பிரிட்டன் என்பவர், ஆப்பிரிக்க கண்டத்தின் முழு நீளமான 16,000 கிலோமீட்டர்களுக்கு மேலான தொலைவிற்கு ஓடிய முதல் நபர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிட் ஜான் ஆல்பிரட் டின்னிஸ்வுட் (111) என்பவர், உலகின் தற்போதைய மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளார்.
ரோமானியக் கலாச்சாரத்தை கொண்டாடுவதற்காகவும், ரோமானிய மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஏப்ரல் 08 ஆம் தேதியன்று சர்வதேச ரோமானிய தினம் அனுசரிக்கப்படுகிறது.