உச்ச நீதிமன்றம் ஆனது நீதிபதி அனிருத்தா போஸ் என்பவரை போபால் நகரில் உள்ள உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் (NJAC) இயக்குநராக நியமித்துள்ளது.
கடற்படைப் பணியாளர்களின் தலைமைத் தளபதி அட்மிரல் ஹரி குமார், கடற் கொள்ளை எதிர்ப்பு மீதான நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக, INS சாரதா என்ற ரோந்துக் கப்பலுக்கு ‘On the Spot Unit Citation’ விருதினை வழங்கினார்.
ஓமரி என்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலின் அனைத்து 19 பணியாளர்களையும் (11 ஈரானியர்கள் மற்றும் 8 பாகிஸ்தானியர்கள்) பாதுகாப்பாக விடுவிக்கும் பணியில் இந்தக் கப்பல் ஈடுபட்டது.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நிறுவனம் ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் விளம்பரப் பட விருதை வென்றதன் மூலம் மிகவும் மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
HDFC வங்கியானது, லட்சத்தீவில் தனது கிளையைத் திறந்த முதல் தனியார் வங்கி ஆகும்.
தெருவோரங்களில் வாழும் குழந்தைகளின் அவல நிலையைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அவர்களின் உள்ளடக்கம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 12 ஆம் தேதியன்று தெருவோரங்களில் வாழும் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப் படுகிறது.