TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 19 , 2024 219 days 225 0
  • நடப்பு நிதியாண்டில் நாட்டில் உள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமான மற்றும் வணிக பயன்பாட்டு நிலக்கரித் தொகுதிகளில் 170 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய இராணுவம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மனிதரால் எளிதில் சுமந்து செல்லக் கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை ஆயுத அமைப்பின் பரிசோதனையை மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • 51வது தேசிய கேரம் (சுண்டாட்டம்) சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிருக்கான இறுதிப் போட்டியில் வென்று ரஷ்மி குமாரி 12வது முறையாக தேசிய மகளிர் கேரம் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இந்திரா காந்திக்குப் பிறகு நியூஸ் வீக் என்ற அமெரிக்க இதழின் அட்டைப் படத்தில் இடம் பெறும் இந்தியாவின் 2வது பிரதமர் என்ற பெருமையினை இந்தியப் பிரதமர் பெற உள்ளார்.
    • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நியூஸ்வீக் இதழின் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்றார்.
  • நாசா நிறுவனமானது தற்போது அதன் புதிய புவிக் கண்காணிப்பு PACE செயற்கைக் கோளில் இருந்து பெறப்பட்ட அறிவியல் சார் தரவுகளை பொது வெளியில் வெளியிட்டு உள்ளது.
    • கடல் வளம், காற்றின் தரம் மற்றும் மாறி வரும் பருவநிலையின் விளைவுகள் ஆகியவற்றின் முக்கியமான மதிப்பீடுகளை இது வழங்குகிறது.
  • 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் கத்தியால் தாக்கப்பட்ட பிரிட்டிஷ் - அமெரிக்க எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ‘Knife: Meditations After an Attempted Murder’ எனப்படும் தனது புதிய சுயசரிதை புத்தகத்தில் இந்த சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.
  • பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் குளோபல் ஹெல்த் அமைப்பின் இயக்குனர் டாக்டர் ககன்தீப் காங், உலக சுகாதாரத்திற்கான மதிப்புமிக்க ஜான் டிர்க்ஸ் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்க அரசானது அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையேயான முதலாவது முத்தரப்பு உச்சி மாநாட்டினை வாஷிங்டன் D.C. நகரில் அமைந்துள்ள வெள்ளை மாளிகையில் நடத்தியது.
  • சர்வதேச தலைப்பாகை தினம் என்பது சீக்கிய மதத்தில் தலைப்பாகை அணிவதன் வளமான கலாச்சார மற்றும் சமய முக்கியத்துவத்தைக் கௌரவிப்பதற்காக ஏப்ரல் 13 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திரக் கொண்டாட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்