17 வயதான D குகேஷ், கேண்டிடேட்ஸ் (சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு நிலை) சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று, இந்த உலகப் பட்டத்தை வென்ற இளம் வயது வீரராக வரலாறு படைத்துள்ளார்.
அனந்த் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் பவுலூரி சுப்பா ராவிற்கு இந்திய வானூர்தி அறிவியல் சமூகத்தின் (ASI) ‘ஆர்யபட்டா விருது’ வழங்கப்பட்டுள்ளது.
"இந்தியாவில் விண்வெளி அறிவியலை மேம்படுத்துவதில் ராவ் ஆற்றிய மகத்தான வாழ்நாள் அளவிலானப் பங்களிப்பு" என்ற விருது அங்கீகாரத்தைப் பெற்றார்.
மெட்டா நிறுவனமானது அதன் மிகவும் திறன் மிக்க Meta Llama 3 எனப்படும் பெரிய மொழி மாதிரியினை (LLM) அறிமுகப்படுத்தியுள்ளது.
நேபாள நாடானது, LGBT சமூகத்தினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடமாக தனது நாட்டை மேம்படுத்துவதற்காக தனது முதல் சர்வதேச ரெயின்போ (பல் சமூக) சுற்றுலா மாநாட்டை காத்மண்டு நகரில் நடத்தியது.
ஏப்ரல் 24 ஆம் தேதியானது உலக அளவில் பலதரப்பு மற்றும் அமைதிக்கான அரசு முறை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பேராளர்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏப்ரல் 25 ஆம் தேதியன்று சர்வதேசப் பிரதிநிதிகள் தினம் உலகளவில் அனுசரிக்கப்பட்டது.
1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதியன்று, ஐம்பது நாடுகளின் பிரதிநிதிகள் முதன்முறையாக சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒன்று கூடினர்.