இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், பேராசிரியர் நைமா கத்தூன் என்பவரை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) முதல் பெண் துணை வேந்தராக நியமித்துள்ளார்.
சர்வதேச கைவினைப் பொருட்கள் பேரவை (WCCI) ஆனது இந்த ஆண்டிற்கான இந்தியாவின் உலக கைவினை நகரமாக (WCC) இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறுவதற்கு முன்பாக, அதன் கைவினை உற்பத்திப் பகுதிகளை மிகவும் நன்கு ஆய்வு செய்வதற்காக ஸ்ரீநகரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
28வது பங்குதாரர்கள் மாநாட்டின் (COP28) தலைவர் டாக்டர். சுல்தான் அல் ஜாபர், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐக்கிய அரபு அமீரக ஒருமித்த ஒரு கருத்து ஒப்பந்தத்தினை வழங்குவதன் மூலம் ஆற்றல் மாற்றத்தை முன்னெடுத்துச் சென்ற அவரது மிகப்பெரும் தலைமைத்துவத்திற்காக உலக எரிசக்தி சபையின் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்காலம் குறித்த உச்சி மாநாடு ஆனது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
மாடர்னா எனப்படும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது, கென்யாவில் அதன் கோவிட் தடுப்பூசிகளுக்கான தேவை கடுமையாக வீழ்ச்சியடைந்ததை அடுத்து, தடுப்பூசி தயாரிக்கும் ஆலையினை அங்கு நிறுவும் திட்டத்தை இடை நிறுத்தியுள்ளது.