தன்னுடன் போட்டியிட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களும் தேர்தலில் இருந்து விலகியதனாலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாலும் குஜாரத்தின் சூரத் நகரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் தூதராக யுவராஜ் சிங் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சோதனை பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பபட உள்ள போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணிக்க உள்ளனர்.
இந்தியக் கடற்படையானது கடல்சார் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சவால்களை எதிர் கொள்வதற்கான அதன் தயார்நிலையை சரிபார்க்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கிழக்குக் கடற்கரையில் ஒரு விரிவான பயிற்சியை மேற்கொண்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பானது BIS தர நிலையின் 6 என்ற மிக அதிகமான அச்சுறுத்தல் நிலைக்கு எதிராக வேண்டி இந்தியாவின் பாதுகாப்பிற்காக இலகுவான குண்டு துளைக்காத மேலுடையினை உருவாக்கியுள்ளது.
பொது மருந்துக் கடைகளில் மருத்துவர் ஆலோசனையுடன் கூடிய மருந்துச் சீட்டு இல்லாமல் வழங்கப்படும் மருந்துகளின் பட்டியலை முடிவு செய்வதற்காக அதுல் கோயலின் கீழ் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்திய அரசின் நிதி அமைச்சகம் ஆனது, தேசிய உரங்கள் நிறுவனத்திற்கு நவரத்னா அந்தஸ்தினை வழங்கியுள்ளது.
தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு) ஆனது புவி தினத்தை முன்னிட்டு இந்தியாவின் பசுமை நிதியளித்தலுக்கான தேவையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட அதன் பருவநிலை உத்தி 2030 என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
காம்ரூப் தேர்தல் மாவட்டத்தின் முறைசார் வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு பிரிவு (SVEEP) ஆனது, கௌகாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வையும், ஈடுபாட்டையும் வலுவாக மேம்படுத்துவதற்காக முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஒரு நகல் வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியக் கடற்படையின் இரண்டு பெண் அதிகாரிகள் மேற்கொண்ட முதலாவது 2 மாத கால கடல் கடந்தப் பயணத்திற்குப் பிறகு இந்தியக் கடற்படையின் கப்பல் INSV தாரிணி கோவாவில் உள்ள தனது துறைமுகத்திற்குத் திரும்பியது.
இந்தப் பயணம் ஆனது கப்பல் படைத் தளபதிகளான தில்னா. K மற்றும் ரூபா. A ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
ஆசியா முழுவதும் புலிகள் வாழும் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக வேண்டி அடுத்த பத்தாண்டுகளுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய நிதியானது திரட்டப் படுவதற்காக 2024 ஆம் ஆண்டு புலிகள் வளங்காப்பு மாநாடு ஆனது பூடான் நாட்டினால் நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டின் கருத்துரு, "புலிகள் வாழும் பகுதிகளுக்கான நிலையான நிதி” என்பதாகும்.
கல்விக் கருவியாக ஜாஸ் இசை பயன்படுத்தப்படுவதன் நற்பண்புகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காகவும், மக்களிடையே அனுதாபம், பேச்சுவார்த்தை மற்றும் மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காகவும் ஏப்ரல் 30 ஆம் தேதியன்று சர்வதேச ஜாஸ் இசை தினம் கொண்டாடப் படுகிறது.