இந்திய அரசானது, UAE நாட்டின் அபுதாபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC13) உலக வர்த்தக அமைப்பின் 164 உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து பங்கேற்றது.
SJVN லிமிடெட் நிறுவனமானது, இமாச்சலப் பிரதேசத்தின் ஜக்ரி எனுமிடத்தில் உள்ள அதன் 1,500 மெகாவாட் திறன் கொண்ட நாத்பா ஜாக்ரி நீர் மின் நிலையத்தில் (NJHPS) இந்தியாவின் முதல் பல்நோக்கு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தினைச் சோதனை முறையில் தொடங்கியுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள அதானி குழுமத்தின் விழிஞ்சம் துறைமுகம் ஆனது இந்தியாவின் முதல் சரக்குப் பரிமாற்றத் துறைமுகமாகச் செயல்படுவதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
இந்திய வரலாற்று ஆவணங்கள் ஆணையம் (IHRC) ஆனது, ஒரு புதிய முத்திரைச் சின்னம் மற்றும் முழக்கத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது.
‘யத்ர இதிஹாஸம் பவிஷ்யம் ப்ரசக்சாந்தஹ்’ என்பது அதன் புதிய முழக்கம் ஆகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனமானது, அதன் ‘இலகுரக’ செயற்கை நுண்ணறிவு மாதிரியின் சமீபத்திய வடிவத்தினை பை-3-மினி வெளியிட்டுள்ளது.
இது மிகவும் திறன் மிக்க மற்றும் செலவு குறைந்த சிறிய மொழி மாதிரிகள் (SLMs) கிடைக்கப் பெறுகின்ற திறந்தநிலை மூலச் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் தொகுப்பாகும்.