TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 2 , 2024 206 days 209 0
  • கருக்கு, சங்கதி, மனுஷி போன்ற இலக்கியப் படைப்புகளால் புகழ் பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான பாமா என்பவர் வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதைப் பெற்றுள்ளார்.
  • இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையானது மத்தியப் பொது நிறுவனங்களின் துறையின் ‘நவரத்னா அந்தஸ்தினைப்’ பெற்றுள்ளது.
  • துபாய் நாடானது, 35 பில்லியன் டாலர் செலவில் 400 நுழைவுவாயில்கள் மற்றும் ஐந்து இணை ஓடுபாதைகளைக் கொண்டுள்ள வகையில் அமைந்த  "உலகின் மிகப்பெரிய" விமான நிலைய முனையத்தினைக் கட்டமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • 'முக்கிய கனிமங்கள் குறித்த உச்சி மாநாடு: பலன் மற்றும் செயலாக்கத் திறன்களை மேம்படுத்துதல்' என்ற மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • சத்தீஸ்கர் பச்சாவ் அந்தோலனின் ஒருங்கிணைப்பாளரும், ஹஸ்தியோ ஆரண்ய பச்சாவோ சங்கர்ஷ் சமிதியின் ஸ்தாபன உறுப்பினருமான அலோக் சுக்லா, ஆசியாவின் 2024 ஆம் ஆண்டு கோல்ட்மேன் பரிசினைப் பெற்றுள்ளார்.
  • சரக்கு இரயில் போக்குவரத்தின் மூலமான வருவாயினை அதிகரிப்பதற்காகவும், இரயில் சேவை வலையமைப்புகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்காகவும், வேகமான பயணியர் இரயில் இயக்கத்தினை செயல்படுத்துவதற்காகவும் கூடுதலாக 200 கதி சக்தி சரக்கு இரயில் முனையங்களை அமைக்க இந்திய இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    • இந்த விரிவாக்கம் ஆனது 2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முதல் 100 கதி சக்தி சரக்கு ரயில் முனையங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகிறது.
  • பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புகள் குறித்த 6வது சர்வதேச மாநாடானது (ICDRI) புது டெல்லியில் நடைபெற்றது.
    • இந்நிகழ்வின் கருத்துரு, ‘மிக உறுதியான எதிர்காலத்திற்காக இன்றைக்கு முதலீடு செய்தல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்