டாடா குழுமம் நிறுவனமானது, இராணிப்பேட்டையில் தனது மையத்தினை நிறுவச் செய்வதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதலாவது முதலீடு என்ற நிலையில் கர்நாடகாவின் தார்வாட் தொழிற்சாலைக்கு பிறகு தென்னிந்தியாவில் அந்த நிறுவனத்தின் இரண்டாவது முதலீடு இது ஆகும்.
சீதனம் என்பது ஒரு பெண்ணின் "முழுமையான சொத்து" என்றும், கணவனுக்கு அந்த சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
26வது உலக ஆற்றல் காங்கிரஸ் மாநாடு நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடத்தப் பட்டது.
ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி, ஹம்சா யூசுஃப், முதலாவது அமைச்சர் (பிரதமர்) பதவி மற்றும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) தலைமைப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்தியத் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் சங்கம் (IVMA) ஆனது பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனரும் செயல் தலைவருமான டாக்டர். கிருஷ்ணா M. எல்லா என்பவரை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2026 ஆம் காலக் கட்டம் வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு அச்சங்கத்தின் புதிய தலைவராக அறிவித்தது.