TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 6 , 2024 202 days 254 0
  • உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜனைப் பயன்படுத்துவதைத் தடை செய்து,  தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
  • ICICI வங்கியானது, 8 டிரில்லியன் ரூபாய் என்ற வரம்பைக் கடந்து இந்தியாவின் சந்தை மூலதனம் கொண்ட முதல் ஐந்து நிறுவனங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
  • இந்திய இராணுவம், புனித் பாலன் குழுமம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப் பட்ட இந்தியாவின் முதல் அரசியலமைப்புப் பூங்கா புனே நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவானது கௌகாத்தியில் உள்ள தேசிய சிறப்பு உயர்திறன் கொண்ட மைதானத்தில் 2025 ஆம் ஆண்டின் BWF உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியினை நடத்தவுள்ளது.
  • பெருநிறுவன சமூகப் பொறுப்பிற்கு ஆற்றிய சிறந்தப் பங்களிப்பிற்காக டாக்டர் பினா மோடி என்பவருக்கு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • மைக்ரான் இந்தியா, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குஜராத்தில் உள்ள அதன் சனந்த் உற்பத்தி மையத்தில் தொகுக்கப்பட்ட சில்லுகளின் (Chip) முதல் தொகுப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • புவி அறிவியல் துறை அமைச்சகம் (MoES) ஆனது, தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NCPOR) மூலம் கேரளாவின் கொச்சி நகரில் 46வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (ATCM 46) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் (CEP 26) 26வது கூட்டம் ஆகியவற்றினை நடத்த உள்ளது.
  • காத்மாண்டுவில் உள்ள காற்றின் தரம் ஆனது, உலகில் 'ஆரோக்கியமற்ற காற்று' உள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
    • மாசுபாட்டின் அடிப்படையில், புது டெல்லி, தாய்லாந்தின் சியாங் மாய், வியட் நாமின் ஹனோய், தாய்லாந்தின் பாங்காக் மற்றும் வங்காளதேசத்தின் டாக்கா ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்