TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 9 , 2024 70 days 164 0
  • நியூஸ்பேப்பர் டிசைன்.இன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்த 6வது சர்வதேச செய்தித் தாள் வடிவமைப்புப் போட்டியில் தி ஹிந்து இதழின் விளக்க கட்டுரைப் பக்கம் (Hindu’s explainer) மூன்று விருதுகளை வென்றுள்ளது.
  • ஓய்வூதியத் துறையானது அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கு வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் அனுமதிகளைக் கண்காணிப்பதற்காக வேண்டி பவிஷ்யா என்ற இயங்கலை தளத்தினைத் தொடங்கியுள்ளது.
  • KP.2 மற்றும் KP 1.1 வகைகளை உள்ளடக்கிய, FLiRT என அழைக்கப்படும் ஒமைக்ரான் JN.1 மரபு வழியில் உள்ள கோவிட்-19 வகைகளின் பாதிப்பு ஆனது அமெரிக்காவில் வேகமாகப் பரவி வருகிறது.
  • ஐரோப்பிய ஒன்றியம் ஆனது சமீபத்தில் லெபனான் நாட்டிற்கு 1 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
  • சிரிப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அதன் பல ஆரோக்கிய நன்மைகளையும் மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 05) உலக சிரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்