TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 16 , 2024 63 days 201 0
  • நேபாளிய ஷெர்பா மலை ஏறும் வீரரான கமி ரிட்டா 28 முறை மலையேறிய அவரதுச் சொந்தச் சாதனையை முறியடித்து, 29வது முறையாக எவரெஸ்ட் மலையினை ஏறி சாதனை படைத்துள்ளார்.
    • 71 ஆண்டு கால மலையேறுதல் வரலாற்றில் உலகின் மிக உயரமான சிகரத்தை அதிக முறை ஏறி சாதனைப் படைத்தவர் என்ற ஒரு பெருமையினை அவர்  பெற்று உள்ளார்.
  • ஐக்கியப் பேரரசு ஆனது, அதன் மக்கள்தொகையில் சுமார் 0.7%, அரை மில்லியன் அளவிலான மக்களின் முழுமையான-மரபணு வரிசையாக்கத்தினை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளது.
    • உயிரியல் அறிவியலில் உடனடி மற்றும் நீண்ட கால முன்னேற்றங்களுக்கான தொலைநோக்கு தாக்கங்களுடன் கூடிய இத்தகைய தரவுத் தொகுப்புகள் மாற்றம் மிக்க ஒன்றாக அமையும்.
  • பட்டினி நிலையினைத் தடுக்கவும், வறுமையைக் குறைக்கவும், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்குமான தாவர ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மே 12 ஆம் தேதியன்று சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் (IDPH) அனுசரிக்கப் படுகிறது.
    • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'தாவர ஆரோக்கியம், பாதுகாப்பான வர்த்தகம், எண்ணிமத் தொழில்நுட்பம்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்