இன்ஃபோசிஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மேலாண்மை அமைப்புக்கான ISO 42001:2023 சான்றிதழைப் பெற்றுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்து கெளரவப் பட்டங்களைப் பெறும் 10 சிறப்பு மிக்க நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
டாடா சன்ஸ் தலைவரான என். சந்திரசேகரன், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்டுக்கு மதிப்புமிக்க சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பன்றிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து வரலாறு படைத்த முதல் நபரான அமெரிக்காவின் ரிச்சர்ட் "ரிக்" ஸ்லேமன் (62) சமீபத்தில் காலமானார்.
பீகாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி காலமானார்.
இவர் 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் பீகாரின் துணை முதல்வராகப் பணி ஆற்றினார்.