TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 20 , 2024 59 days 117 0
  • தேசிய பாதுகாப்புப் படைக்கும் (NSG) அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் படைக்கும் (SOF) இடையேயான “தர்காஷ்” எனப்படும் 7வது இந்திய-அமெரிக்க கூட்டுத் தீவிரவாத எதிர்ப்புப் பயிற்சி சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது.
  • TATA AIG நிறுவனமானது, இந்தியாவில் முதல் முறையாக, சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக் கோள்களுக்கான மூன்றாம் தரப்பு பொறுப்புக் காப்பீட்டை  அறிமுகப் படுத்தியுள்ளது.
  • HDFC வங்கியானது, விசா கடன் அட்டை வலையமைப்புகளுடன் சேர்த்து PIXEL எனப்படும் அதன் முதல் மெய்நிகர் கடன் அட்டையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சிறுகதையில் வல்லமை பெற்று விளங்கியதற்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கனடா நாட்டின் ஆலிஸ் மன்ரோ சமீபத்தில் காலமானார்.
    • 2013 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசினையும், 2009 ஆம் ஆண்டில் அவரது படைப்பிற்காக சர்வதேசப் புக்கர் பரிசினையும் அவர் பெற்றுள்ளார்.
  • ஜப்பானியக் கூட்டமைப்பு ஆனது, சமீபத்தில் உலகின் முதல் அதிவேக 6G முன்மாதிரி சாதனத்தை வெளியிட்டுள்ளது.
    • இது வினாடிக்கு 100 ஜிகாபிட் வேகத்தில் (Gbps), 300 அடிக்கு மேலான தூர வரம்பிற்கு தரவை அனுப்பும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்