வரும் அக்டோபரிலிருந்து விமானங்களில் 30,000 அடி உயரத்திலும், பயணிகள் அழைப்புகளை மேற்கொள்ளலாம் மற்றும் இணையத்தில் உலவலாம் என தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. முன்னதாக இந்திய வான்வெளிக்குள் 9850 அடி உயரம் முதல் குரல் மற்றும் தரவு சேவைகளை வழங்க உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்கள் அனுமதிக்கப்படும் என டிராய் அறிவித்திருந்தது.
பாகிஸ்தானின் சிக்கன இயக்கத்தின் ஒரு பகுதியாக தன்னிச்சையான அரசு நிதி உபயோகம் மற்றும் அதிபர், பிரதமர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகள், தலைவர்களின் முதல் வகுப்பு விமானப் பயணத்தை அந்நாட்டின் புதிய அரசாங்கம் தடைசெய்துள்ளது.