TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 27 , 2018 2154 days 651 0
  • ஆகஸ்ட் 23 அன்று இலங்கையின் ஜாப்னாவில் நல்லூர் கந்தசாமி கோவிலின் வருடாந்திர திருவிழா புனித கொடியேற்று நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த 25 நாள் திருவிழாவில் தேர்த் திருவிழாவானது அனைத்து நிகழ்வுகளிலும் மிகவும் பிரபலமானதாகும்.
  • உத்திரப் பிரதேச அரசு ஏற்பாடு செய்திருந்த கிருஷி கும்ப் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியானது லக்னோவில் உள்ள இந்திய கரும்பு ஆராய்ச்சிக் கழகத்தில் (டெலிபாக்) நடைபெற்றது.
    • விவசாயத் துறையில் விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில் தொடங்குபவர்கள் ஆகியோருக்கிடையே அறிவையும் நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்ள ஒரு தளத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • 2018 செப்டம்பரில் அருணாச்சலப் பிரதேச அரசு ‘அருணாச்சல மாற்றம் & விரும்பத்தகுந்த தலைமைத்துவம்’ (Arunachal Transformation & Aspirational Leadership - ATAL) என்ற கூடுகையை நடத்தவுள்ளது. பொதுக்கொள்கை மற்றும் ஆளுமைத் திட்டங்களில் மாநிலத்தின் 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களை ஈடுபடுத்துவதே இந்த 3 நாள் ATAL மாநாட்டின் நோக்கமாகும்.
  • அறிவுப் பகிர்வு, உலக கலாச்சார கருத்துகளுக்கு வழி வகுத்தல் ஆகியவற்றிற்காக ஒருங்கிணைக்கப்பட்ட மேடையில் பணியாற்றுவதற்காக பூடானின் திம்புவில் 2018ம் ஆண்டின் மலை எதிரொலி இலக்கிய விழாவின் 9வது பதிப்பு தொடங்கியது. இது இந்தியா மற்றும் பூட்டானுக்கு இடையே உள்ள 50 ஆண்டு கால இராஜாங்க உறவுகளைக் கொண்டாடுகிறது.
  • மூத்த கிரிக்கெட் வீரான வி.வி.எஸ்.லக்ஷ்மணனின் ‘281 மற்றும் அதற்கு அப்பால்’ (281 and beyond) என்ற புத்தகமானது வரும் நவம்பர் 2018ல் வெஸ்ட்லேண்ட் ஸ்போர்ட்ஸ் மூலம் வெளியிடப்படவுள்ளது. 2001ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் திருப்பு முனையை ஏற்படுத்திய ஆட்டத்திலிருந்து 281 ரன்கள் என்ற இந்த தலைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • ஆஸ்திரேலிய பசுமைக் கட்சியில் உள்ள பாகிஸ்தானில் பிறந்த மெஹ்ரின் ஃபருகி, நாட்டின் செனட்டில் முதல் இஸ்லாமிய பெண்ணாக இடம் பிடித்துள்ளார். பசுமைக் கட்சியின் லீரையனன் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றதையடுத்து இவர் அவருக்கு பதிலாக பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்