TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 28 , 2024 180 days 207 0
  • கோவாவில் உள்ள தேசிய துருவப் பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம் (NCPOR) மற்றும் அண்டார்டிக் உடன்படிக்கை செயலகம் ஆகியவை இணைந்து கேரளாவின் கொச்சி நகரில் 46வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்தன.
  • உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) நிறுவனரும் செயல் தலைவருமான கிளாஸ் ஷ்வாப், தனது தற்போதையப் பொறுப்பில் இருந்து விலகி, வரும் ஆண்டின் ஜனவரி மாதத்திற்குள் அறங்காவலர் குழுவின் தலைவராக பதவியேற்க உள்ளார்.
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) 194 உறுப்பினர் நாடுகள் ஒரு பெருந்தொற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான புதிய விதிகள் குறித்த இரண்டு ஆண்டுகாலப் பேச்சுவார்த்தையினை ஜெனீவாவில் நிறைவு செய்ய உள்ளன.
    • எதிர்காலத்தில் ஏற்பட உள்ள பெருந் தொற்றுநோய்களுக்கு எதிராக உலகளாவிய பாதுகாப்பை வலுப்படுத்துவதே இந்தப் பேச்சுவார்த்தைகளின் மிகவும் முக்கிய குறிக்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்