TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 29 , 2024 50 days 122 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் குற்றத்தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஆணையத்தின் (CCPCJ) 33வது அமர்வு வியன்னா நகரில் நடைபெறவுள்ளது.
  • இமாச்சலப் பிரதேசத்தின் லஹவுல் & ஸ்பிட்டி பகுதியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகள், கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, நீல மலையாடுகள் அல்லது பரல் மற்றும் இமாலயப் பனிப்பிரதேச ஆடு ஆகியவற்றின் எண்ணிக்கையை மதிப்பிடச் செய்வதற்காக ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.
  • G7 அமைப்பானது 2050 ஆம் ஆண்டிற்குள் தனது நிகரச் சுழிய உமிழ்வு நிலையினை அடைவதற்கான அதன் உறுதிப்பாட்டினை அறிவித்துள்ளது.
  • நார்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீனத்தை அங்கீகரித்து உள்ள நிலையில் ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு அத்தகைய அங்கீகாரத்திற்கு உறுதி அளித்தது இதுவே முதல் முறையாகும்.
  • உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்திற்கான தடைகளை அறிமுகப் படுத்தப் போட்டியிட்டு வருவதால், ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் உறுப்பினர் நாடுகள் ஆனது, செயற்கை நுண்ணறிவினை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான உலகின் முதல் மாபெரும் சட்டத்திற்கு தனது இறுதி ஒப்பந்தத்தினை அளித்துள்ளது.
  • மதிப்புமிக்க பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையினை அனசுயா சென்குப்தா பெற்றுள்ளார்.
  • சமீபத்தில், 2030 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளை குப்பைகள் இல்லாத வகையில் மேற்கொள்வதற்கு உறுதியளிக்கும் விதமாக பன்னிரண்டு நாடுகள் ESA/EU விண்வெளி சபையில், கழிவுகளற்ற விண்வெளி என்ற சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்