TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 30 , 2024 49 days 148 0
  • 2024 ஆம் ஆண்டு IPL போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது மூன்றாவது IPL பட்டத்தினை வென்றுள்ளது.
  • IUCN அமைப்பின் முதல் உலகளாவியச் சதுப்புநில மதிப்பீட்டின்படி, தென்னிந்தியக் கடற்கரையோரங்களில் உள்ள சதுப்புநிலங்கள், குறிப்பாக தமிழகத்தை உள்ளடக்கிய கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகள், மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் நகரைச் சேர்ந்த 18 வயது ரிக்சா ஓட்டுநர் ஆர்த்தி, இலண்டனில் அமல் குளூனி மகளிர் அதிகாரமளிப்பு விருதைப் பெற்றுள்ளார்.
  • பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளால் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படும் பணிகள் மற்றும் பதவிகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதை கர்நாடக அரசு தற்போது கட்டாயமாக்கியுள்ளது.
  • சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (IOC) ‘Let’s Move India’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
    • பாரீஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களைக் கொண்டாடுவதற்காக மக்களை ஊக்குவிப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
  • 2023-24 ஆம் ஆண்டில் மாநில மின் பகிர்மான நிறுவனங்களால் மின்பகிர்மானக் கம்பி வடங்களை இணைத்ததன் அடிப்படையில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
    • அதைத் தொடர்ந்து குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது போலியோ நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே போலியோ இன்னும் பொதுவாக காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்