TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 5 , 2024 172 days 206 0
  • இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ICC அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த வீரர் விருதைப் பெற்றுள்ளார்.
  • 7 ஆம் வகுப்பு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பப் பாடப்புத்தகத்தில் செயற்கை நுண்ணறிவு கற்றலைக் கேரள மாநில அரசு இணைத்துள்ளது.
  • மூடிஸ் மதிப்பீடுகள் ஆனது, நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாகவும், 2025 ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என கணித்து உள்ளது.
  • சர்வதேச மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பு (IFPMA) ஆனது, சமீபத்தில் எதிர்ப்புத் திறன் முதல் நெகிழ்திறன் வரை: நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனுக்கான எதிர் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்டது.
  • சீனாவில் 71 வயது முதியவர் ஒருவர், மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்துப் பெறப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல் உயிருள்ள நபர் மற்றும் பன்றியின் உறுப்புகள் பொருத்தப்பட்ட ஐந்தாவது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • OpenAI நிறுவனம் ஆனது, GPT-4o மொழி மாதிரியினால் இயக்கப்படும் ChatGPT Edu எனப்படும் அதன் செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருளின் புதிய வடிவத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வளாகச் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துவதற்காக என்று பல்கலைக்கழகங்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆகியவை இணைந்து "ஒருங்கிணைந்த இந்தியா - இயற்கை வேளாண்மை பொருள்" முத்திரைச் சின்னத்தினை உருவாக்கியுள்ளன.
    • இது இந்தியா இயற்கை வேளாண்மை முறையிலான பொருட்கள் மற்றும் ஜெய்விக் பாரத் முத்திரைச் சின்னங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும்.
  • தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளால் தூண்டப்பட்ட பங்குச் சந்தையின் ஆரம்ப கட்ட வர்த்தகத்தில் சென்செக்ஸ் புள்ளி 76,738 என்ற சாதனை அளவினை எட்டியது (ஜூன் 3).
    • நிஃப்டி புள்ளியும் இதுவரை இல்லாத அளவிலான 23,338 புள்ளிகளை எட்டியது.
  • 1986 ஆம் ஆண்டில் பண்டிட் ஜுகல் கிஷோர் சுக்லா அவர்களால் தொடங்கப்பட்ட உதாந்த் மார்தண்ட் எனப்படும் இந்தியாவின் முதல் இந்தி மொழி செய்தித்தாள் வெளியான நாளினை நினைவு கூரும் விதமாக இந்தி மொழி இதழியல் தினம் என்பது ஒவ்வோர் ஆண்டும் மே 30 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உலக மின்சாரச் சிகரெட்டுகள் தினம் ஆனது மே 30 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
    • மின்சாரச் சிகரெட்டுகள் பற்றி விழிப்புணர்வினை அதிகரிப்பது மற்றும் புகை பிடிப்பதை நிறுத்த முடியாத புகைப்பிடிக்கும் பழக்கத்தினை நிறுத்துவதற்கு உதவுவதும் இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்