TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 7 , 2024 170 days 268 0
  • அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) ஆனது, வங்கி வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு உதவுவதற்காக "வங்கி கிளினிக்" எனும் முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • ஆளும் பா.ஜ.க. மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) ஆகிய கட்சிகள் முறையே அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் முறையே மூன்றாவது மற்றும் இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
  • நிதித் தொழில்நுட்பத் துறையில் (SRO-FT) பிரதிநிதித்துவ அங்கத்தினைக் கொண்டிருக்கும் வகையில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக வேண்டி சுய-ஒழுங்குமுறை வகையிலான நிறுவனங்களை அங்கீகரிப்பதற்கான ஒரு இறுதிக் கட்டமைப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சி மாநாடான 2024 ஆம் ஆண்டு IISS ஷங்க்ரி-லா பேச்சுவார்த்தையானது சிங்கப்பூரில் நடைபெற்றது.
  • என்விடியா நிறுவனத்தின் ரூபின் என்று அழைக்கப்படும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்திலான செயற்கை நுண்ணறிவு (AI) சில்லுகள் இயங்குதளம் ஆனது 2026 ஆம் ஆண்டில் வெளியிடப்பட உள்ளது.
  • 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈராக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் காப்பு படையானது (UNAMI) 2025 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டை விட்டு வெளியேறும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
  • பாகிஸ்தான் இராணுவ மருத்துவப் படையினைச் சேர்ந்த டாக்டர் ஹெலன் மேரி ராபர்ட்ஸ், படைத் தளபதி பதவியை எட்டிய கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற வரலாற்றினைப் படைத்துள்ளார்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க குட்லெப்ப ஹல்லிக்கேரி விருதிற்கு மூத்த எழுத்தாளர் சித்தலிங்க பட்டணஷெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய அரசானது, குடிமக்கள் நேரிய (நியாயமான) அழைப்புகளை எளிதாகக் கண்டறிவதற்காகவும், தொலைபேசி வழிச் சந்தையிடல் நிறுவனங்களிடமிருந்து வரும் தேவைப்படாத அழைப்புகளைத் தடுப்பதற்காகவும் சேவை அல்லது பரிவர்த்தனை சார்ந்த அழைப்புகளைச் செய்வதற்காக 160xxxxxxx என்ற புதிய எண்ணிடுதல் தொடரினை அறிமுகப் படுத்தியது.
    • விளம்பர/சேவை/பரிவர்த்தனை சார்ந்த தொலைபேசி அழைப்புகளைச் செய்வதற்கு தொலைபேசி வழிச் சந்தையிடல் நிறுவனங்களுக்கு தற்போது, ​​140xxxxxxx எண் தொடர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மே 29 ஆம் தேதியன்று 52.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையினைப் பதிவு செய்த டெல்லி வானிலை நிலையம் ஆனது உணர்வுக் கருவிகளின் பிழையால் சரியாகச் செயல்படவில்லை.
    • இது 1998 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதியன்று பலம் எனுமிடத்தில் பதிவான 48.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது மிக உயர்ந்த வெப்பநிலையாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்