TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 9 , 2024 39 days 143 0
  • தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்விக் கழகத்தில் (IOG) அதிநவீன செயற்கை முறை கருத்தரித்தல் (IVF) வசதியானது தொடங்கப் பட்டுள்ளது.
  • புகழ்பெற்ற இந்திய வனவிலங்கு உயிரியலாளரும், அர்ப்பணிப்பு மிக்க வளங் காப்பு ஆர்வலருமான ஆசிர் ஜவஹர் தாமஸ் ஜான்சிங் என்பவர் சமீபத்தில் பெங்களூருவில் காலம் ஆனார்.
  • ஒடிசாவில் உள்ள பாராபதி-கட்டாக் தொகுதியின் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான சோபியா ஃபிர்தௌஸ், ஒடிசா சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • SBI பரஸ்பர நிதி (SBI MF) ஆனது, நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளில் (AUM) 10 டிரில்லியன் ரூபாய் மைல்கல்லை எட்டிய நாட்டின் முதல் நிதியம் என்ற வரலாற்றைப் படைத்துள்ளது.
  • என்விடியா அதன் பங்குகள் 3 டிரில்லியன் டாலர் மதிப்பை உயர்த்தியதை அடுத்து, ஆப்பிள் நிறுவனத்தினை முந்தி உலகின் இரண்டாவது மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது.
  • யுனெஸ்கோ தெற்காசியா அமைப்பானது, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துடன் (MeitY) இணைந்து பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நெறிமுறை மிக்க செயற்கை நுண்ணறிவு பற்றிய தேசிய பங்குதாரர் பயிலரங்கத்தினைப் புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 600 (427 போட்டிகள்) சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
    • அவரைத் தொடர்ந்து கிறிஸ் கெய்ல் (483 போட்டிகளில் 553 சிக்சர்கள்) மற்றும் ஷாஹித் அப்ரிடி (524 போட்டிகளில் 476 சிக்சர்கள்) ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்