TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 29 , 2018 2152 days 673 0
  • ஜிம்பாபே கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லால்சந்த் ராஜ்புத் நியமிக்கப்பட்டுள்ளார்
  • சென்னையின் மெரினா மற்றும் எலியட் கடற்கரையின் துணைப் பாதைகளை கட்டண வாகன நிறுத்துமிடமாக தமிழ்நாடு கார்ப்பரேஷன் மாற்றவுள்ளது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கத்துவா மாவட்டத்தின் ஜவஹர் நவோதயா வித்யாலயா பசோலியில் 22வது இளைஞர் பாராளுமன்ற போட்டி (Youth Parliament competition) நடைபெற்றது. இந்நிகழ்வினை சண்டிகர் பகுதியின் நவோதயா வித்யாலயா சமிதி ஏற்பாடு செய்திருந்தது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராமகிருஷ்ண ராவ் எழுதிய ‘காலோனியல் சின்ட்ரோம் : தி விதேஷி மைண்ட் செட் இன் மாடர்ன் இண்டியா’ (Colonial Syndrome: The Videshi Mind Set in Modern India) என்ற புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
    • இந்தப் புத்தகமானது தனித்துவமான வேறுபாடு அல்லது இந்தியாவின் பழமையான பண்பாடு மற்றும் தற்போதைய நிலைமைக்கிடையேயான தொடர்பின்மை ஆகியவற்றை முன்வைக்கிறது.
  • ஜி.எஸ்.டி. வரிவிகித குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக முறையீடு செய்வதை ஊக்குவிப்பதற்காக தேசிய மிகை இலாபத் தடுப்பு மையமானது (National Anti-Profiteering Authority -NAA) சேவை எண் 011-2400643 என்ற தொலைபேசி எண்ணை துவங்கியுள்ளது.
  • நாட்டின் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவிகளுக்கு இலவச சுகாதார துப்பரவுத் துணிகளை வழங்கும் உலகின் முதல் நாடாக ஸ்காட்லாந்து உருவெடுத்துள்ளது.
  • நமீபியா குடியரசுக்கான அடுத்த உயர் ஆணையராக பிரஷாந்த் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அயர்லாந்துக்கான இந்தியாவின் அடுத்த தூதுவராக சந்தீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தனது தலைநகரமான யோங்யாங்கில் வரும் அக்டோபர் 27-ல் தொடங்கப்படவுள்ள ஆசிய இளைஞர் மற்றும் இளையோருக்கான பளுதூக்கும் சாம்பியன்ஷிப் – 2019 ஐ வடகொரியா நடத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்