TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 12 , 2024 165 days 213 0
  • திமுக பொருளாளர் T.R.பாலு, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இருந்து ஏழாவது முறையாக பாராளுமன்றத்தின் கீழவையில் இடம் பெற்ற இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
    • மேலும் இந்த தேர்தலில் வெற்றியினைப் பதிவு செய்த மிகவும் வயதான வேட்பாளர் இவரே ஆவார்.
  • தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் அமைக்கும் நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியில், தூத்துக்குடியில் ஒரு நாளைக்கு 60 மெகா லிட்டர் (MLD) திறன் கொண்ட உப்புநீர் சுத்திகரிப்பு ஆலையினை அமைப்பதற்காக தமிழக அரசு விரைவில் ஒப்பந்த அறிக்கையினை வெளியிடவுள்ளது.
  • விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
  • தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) ஆனது ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்ற நிலையில் இதன் மூலம் அது உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக மாறும்.
  • பில் கேட்ஸ் தனது ஆரம்ப கால வாழ்க்கை பற்றிய நினைவுக் குறிப்பினை உள்ளடக்கிய ‘Source Code’ எனப்படும் தனது புத்தகம் 2025 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
  • மக்களுக்கு விரிவான வானியல் சுற்றுலா அனுபவத்தை வழங்குவதற்கான நக்சத்திர சபா எனப்படும் புதிய முன்னெடுப்பினை அறிமுகப்படுத்துவதற்கு, உத்தரகாண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் ஆனது ஸ்டார்ஸ்கேப்ஸுடன் கைகோர்த்துள்ளது.
  • மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள தன்னாட்சி சமூகமான இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (STPI), அதன் 33வது ஸ்தாபன தினத்தினை 2024 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் தேதியன்று கொண்டாடியது.
  • ஆவணப் பதிவகங்கள் மற்றும் காப்பகங்களின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்று ஜூன் 09 ஆம் தேதியன்று சர்வதேச ஆவணக் காப்பக தினம் கடைபிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்