TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 15 , 2024 33 days 124 0
  • பசுந்தாள் உரம் பூசப்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசானது, தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • எண்ணிம வழி பணம் செலுத்துதல் தகவல் வழங்கீடு தளத்திற்கான எண்ணிமப் பொது உள்கட்டமைப்பினை நிறுவுவதற்கான பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வதற்காக A.P. ஹோடாவின் தலைமையின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியானது ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் 17வது தவணைத் தொகையை வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • தெலுங்கு தேசம் கட்சியின் (TDP) தலைவர் N. சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்றுள்ளார்.
  • ஜெர்மனியில் நடைபெற்ற ஹெயில்ப்ரோன் நெக்கர்கப் 2024 ஆம் ஆண்டு ATP சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாக்பால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார்.
  • சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH) நிர்வாகக் குழுவானது, 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது FIH ஹாக்கி ஆடவர் இளையோர் உலகக் கோப்பைப் போட்டியை நடத்துவதற்கான நாடாக இந்தியாவை நியமித்துள்ளது.
  • சீனாவின் ஒரு முன்மொழிதலின் பேரில், நாகரிகங்களுக்கிடையேயான ஒரு பேச்சு வார்த்தைக்கான சர்வதேச தினமாக ஜூன் 10 ஆம் தேதியினை ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளது.
    • 2024 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதியானது, நாகரிகங்களுக்கிடையில் மேற் கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைக்கான முதல் சர்வதேச தினத்தினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்