ஆரக்கிள் நிறுவனமானது மாநில இளைஞர்களுக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்பத் திறன்களை வழங்கி வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கைகோர்த்துள்ளது.
இந்திய இரயில்வே நிர்வாகமானது, பல இடங்களில் நடைபெற்ற அரசின் சேவைகளில் அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈடுபடுத்தியதற்காக என்று லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தியா தனது சொந்த ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தினைக் கொண்ட ஆறாவது நாடாக மாற உள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயியும், AGRO RANGERS நிறுவனத்தின் நிறுவனருமான சித்தேஷ் சாகோர், பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடச் செய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை (UNCCD) அமைப்பினால் நில வளங்காப்பு நாயகர் என்று பெயரிடப்பட்டுள்ளார்.
ஐக்கியப் பேரரசின் மத்திய வங்கியானது, இந்திய ரிசர்வ் வங்கிக்கு '2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த இடர் மேலாண்மை நிறுவனம்’ என்ற விருதினை வழங்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, “A Fly on the RBI Wall: An Insider’s View of the Central Bank” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
தந்தையர் தினம் ஆனது ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கி ழமையன்று கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு இத்தினம் ஜூன் 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.