TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 22 , 2024 9 days 89 0
  • அரவிந்தன் செல்வராஜ் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் (ASSOCHAM) தமிழ்நாடு மாநில மேம்பாட்டுச் சபையின் 2024-25 ஆம் ஆண்டிற்கானத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஓடிசாவின கட்டாக்கில் இருந்து 7வது முறையாக உறுப்பினராகியுள்ள பர்த்ருஹரி மஹ்தாப் என்பவரை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
  • பீகார் மாநிலம் ராஜ்கிர் அருகே அமைக்கப்பட்டுள்ள நளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தினைப் பிரதமர் திறந்து வைத்தார்.
  • டெல்லி சர்வதேச விமான நிலையம் ஆனது, பயணிகள் தங்கள் பொருட்களை வழங்கி, குறியீடுகளைப் பெற்று சோதனைக்கு உட்படுத்தும் செயல்முறையை மிகவும் திறன் மிக்கதாகவும் விரைவாகவும் முடிக்க உதவுகின்ற ஒரு சுய சேவைப் பொறிமுறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்திய இராணுவம் ஆனது, படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்படும் கடுமையான தீக்காயங்கள் மற்றும் தோல் தொடர்பான பிற நிலைமைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அதன் முதல் வகையிலான தோல் வங்கி வசதியைத் தொடங்கியுள்ளது.
  • திரைப்படத் தயாரிப்பாளரான வினோத் கனத்ரா, திரைப்படங்களுக்கான அவரது பங்களிப்பிற்காக வேண்டி தென்னாப்பிரிக்காவின் மதிப்புமிக்க 'நெல்சன் மண்டேலா வாழ்நாள் சாதனையாளர் விருதினை' பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • ஆளில்லா ஆயுத அமைப்புகள் கொண்ட படைகள் எனப்படும் ஆளில்லா விமான அமைப்புகளுக்காக இராணுவத்தில் பிரத்தியேக புதிய தனி கிளையை உருவாக்கிய முதல் நாடு உக்ரைன் ஆகும்.
  • சில்லுகள் தயாரிப்பு நிறுவனமான என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பானது எப்போதும் இல்லாத அளவிற்கு (3.34 டிரில்லியன் டாலர்) உயர்ந்ததையடுத்து உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது.
  • கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சுமார் 227.9 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிரபலமாக தனது நிலையை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
  • தாய்லாந்தின் மேலவை ஆனது தன்பாலின திருமணத்தினை அங்கீகரிக்கும் திருமண சமத்துவ மசோதாவை நிறைவேற்றியுள்ளதையடுத்து, தென்கிழக்கு ஆசியாவில் தன் பாலின திருமணத்தினை அனுமதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்