கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து அதிக எண்ணிக்கையில் நபர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி P. கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி S. மணி குமார், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் (SHRC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) ஆனது, சமீபத்தில் இந்தியப் பொது விமானப் போக்குவரத்தில் பாலினச் சமத்துவத்தினை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 25% பெண்கள் வெவ்வேறு விமானப் போக்குவரத்து பணிகளில் பணிபுரிகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதியன்று உலக இசை தினம் அனுசரிக்கப் படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதியன்று, மனிதநேயத்தை ஒரு தத்துவ வாழ்க்கை நிலைப்பாடாகவும், உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறையாகவும் கருத்தில் கொள்வதற்கான விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக மனிதநேய தினம், கொண்டாடப்படுகிறது.