தமிழக அரசானது, பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும், அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு ஊக்குவிப்பதற்காகவும் ‘மகளிரால் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனச் சேவையினை’ சென்னை நகரில் பிங்க் ஆட்டோக்கள் (Pink Autos) என்ற பெயரில் அறிமுகப் படுத்தியுள்ளது.
200 மகளிர் மூன்று சக்கர (ஆட்டோ) வாகன ஓட்டுநர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.
இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு (CII) ஆனது, அதன் மத்திய நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டுப் பரிந்துரைகளில் 'ஏஞ்சல் வரிகள்-புத்தொழில் நிறுவனங்களின் மிகை மதிப்பு வரி’ எனப்படும் வருமான வரிச் சட்டத்தின் 56(2)(viib) பிரிவினை அகற்ற பரிந்துரைத்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் (ILC) 112வது அமர்வு ஆனது ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமையகத்தில் நடைபெற்றது.
OpenAI நிறுவனத்தின் மிகப்பெரியப் போட்டியாளரான Anthropic நிறுவனம் ஆனது, Claude 3.5 Sonnet எனப்படும் அதன் சமீபத்தியச் செயற்கை நுண்ணறிவு மாதிரியினை அறிமுகப் படுத்தியுள்ளது.