TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 28 , 2024 149 days 206 0
  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அதிக எண்ணிக்கையிலான நபர்கள் உயிரிழந்த சோகம் குறித்து விசாரிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையம் ஆனது, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவினை அமைத்துள்ளது.
  • தமிழ்நாடு மாநில வனத் துறையானது தமிழ்நாட்டில் தற்போதுள்ள 40 மலையேற்ற வழிகளைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் மலையேற்றங்களை மேற் கொள்ளச் செய்வதற்கான முன்பதிவு செய்வதற்காக ஒரு இணையதளத்தை விரைவில் தொடங்க உள்ளது.
  • உதகமண்டலத்தில் சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,240 மீட்டர் உயரத்தில் தென்னிந்தியாவின் ஒரே உயர்மட்ட விளையாட்டுப் பயிற்சி மையம் ஆனது திறக்கப் பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதியானது, ‘தமிழ் மொழி தியாகிகள் நாள்’ (தமிழ் மொழி தியாகிகள் தினம்) ஆக அனுசரிக்கப்பட உள்ளது.
  • முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 03 ஆம் தேதியானது ‘செம்மொழி நாள் விழா’ ஆக கொண்டாடப்பட உள்ளது.
  • கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றுவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டசபை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
  • லெப்டினன்ட் ஜெனரல் N.S. ராஜா சுப்ரமணி, இராணுவத்தின் அடுத்த துணைத் தளபதியாக பதவியேற்க உள்ளார்.
  • குளிர்பதனம், வளிப்பதனம் மற்றும் வெப்ப விசையியக்கி தொழில் துறைகள் பற்றிய பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதியன்று உலக குளிர்பதனத் தினம் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்