கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அதிக எண்ணிக்கையிலான நபர்கள் உயிரிழந்த சோகம் குறித்து விசாரிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையம் ஆனது, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவினை அமைத்துள்ளது.
தமிழ்நாடு மாநில வனத் துறையானது தமிழ்நாட்டில் தற்போதுள்ள 40 மலையேற்ற வழிகளைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் மலையேற்றங்களை மேற் கொள்ளச் செய்வதற்கான முன்பதிவு செய்வதற்காக ஒரு இணையதளத்தை விரைவில் தொடங்க உள்ளது.
உதகமண்டலத்தில் சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,240 மீட்டர் உயரத்தில் தென்னிந்தியாவின் ஒரே உயர்மட்ட விளையாட்டுப் பயிற்சி மையம் ஆனது திறக்கப் பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதியானது, ‘தமிழ் மொழி தியாகிகள் நாள்’ (தமிழ் மொழி தியாகிகள் தினம்) ஆக அனுசரிக்கப்பட உள்ளது.
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 03 ஆம் தேதியானது ‘செம்மொழி நாள் விழா’ ஆக கொண்டாடப்பட உள்ளது.
கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றுவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டசபை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் N.S. ராஜா சுப்ரமணி, இராணுவத்தின் அடுத்த துணைத் தளபதியாக பதவியேற்க உள்ளார்.
குளிர்பதனம், வளிப்பதனம் மற்றும் வெப்ப விசையியக்கி தொழில் துறைகள் பற்றிய பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 26 ஆம் தேதியன்று உலக குளிர்பதனத் தினம் கொண்டாடப்படுகிறது.