TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 30 , 2024 12 hrs 0 min 24 0
  • வெளியுறவுத் துறை அமைச்சகமானது, 1967 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியன்று கடவுச் சீட்டுச் சட்டம் இயற்றப் பட்டதைக் குறிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியன்று 12வது கடவுச் சீட்டு சேவை தினத்தினை அனுசரித்தது.
  • தமிழ்நாட்டின் தொழில் நகரமான ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
  • திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
  • ICICI வங்கி லிமிடெட் நிறுவனமானது, 100 பில்லியன் டாலர் (8.4 லட்சம் கோடி ரூபாய்) சந்தை மூலதனத்தினை எட்டிய ஆறாவது இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
  • பராகுவே நாடானது, அதிகாரப்பூர்வமாக சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியின் (ISA) 100வது முழு உறுப்பினராக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்