TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 30 , 2018 2151 days 646 0
  • புது தில்லியில் FICCI-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொலிவுறு இரயில்வே கூட்டமைப்பை மத்திய இரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
  • மத்திய அரசின் சிந்தனைச் சாவடியான நிதி ஆயோக் தனது மூவ்ஹேக் நிகழ்ச்சிக்கு உதவி செய்வதற்காக ஆழ்ந்த புலமை வாய்ந்த தொழில்நுட்ப பங்காளரான கணிணி சில்லு வடிவமைப்பு நிறுவனம் NVIDIA -வை நியமித்துள்ளது.
    • இந்தியாவில் இயங்கும் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட தீர்வுகளை கூர்ந்து கவனிப்பதற்காக மூவ்ஹேக் எனும் உலக இயக்க ஹக்கத்தான் நிகழ்ச்சியை நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்தது.
  • இந்திய மொழிகளிலும், குறிப்பாக உள்ளூர் மொழிகளிலும் ஆன்லைன் உள்ளடக்கத்தைப் பொருத்துவதற்காக நவ்லேகா (Navlekha) திட்டத்தை மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இது புது தில்லியில் நடைபெற்ற நான்காவது ‘Google for India’ நிகழ்ச்சியில் கூகுளின் பிற தயாரிப்புகளின் மேம்பாட்டுடன் இணைந்து வெளியிடப்பட்டது.
    • ‘நவ்லேகா’ (Navlekha) என்பது ‘எழுதுவதற்கான புதிய வழி’ என்று பொருள் கொண்ட சமஸ்கிருத சொல்லாகும். இதன் நோக்கம் இணைய தளத்தை எளிமைப்படுத்துவதன் மூலம் 1,35,000 உள்ளூர் மொழியில் வெளியீட்டாளர்களை ஆன்லைனிற்கு கொண்டு வருவதாகும்.
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது இ - சிகரெட்கள் மற்றும் இதர மின்னணு நிகோடின் வழங்கல் அமைப்புகளின் (ENOS – Electronic Nicotine Delivery Systems) தயாரிப்பு, விற்பனை மற்றும் விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது, புவி அறிவியல் அமைச்சகத்தின் தலைமைத் திட்டமான “கடல்-சேவைகள், தொழில்நுட்பம், கூர்நோக்கல், வளங்கள் படிமமாக்கம் மற்றும் அறிவியல் (SMART – Smart Ocean Service, Technology, Observations, Resources modelling and Science) என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • O – SMART–ன் செயல்படுத்துதலானது நீடித்த வளர்ச்சி இலக்கு – 14 தொடர்பான பிரச்சனைகளைக் களைய உதவும். நீடித்த வளர்ச்சி இலக்கு-14-ன் நோக்கம் பயன்பாட்டை பாதுகாப்பது ஆகும்.
  • ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான இந்திய உயர் ஆணையராக ருச்சி கன்ஷ்யாம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது அப்பதவியில் இருக்கும்K. சின்ஹாவின் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜிம்பாபே குடியரசின் அதிபராக எமர்சன் நன்ககவா பதவி ஏற்றார். ஜிம்பாபேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே 2017 ஆம் ஆண்டு நவம்பரில் பதவி விலகினார். புதிய அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்