TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 6 , 2024 12 days 67 0
  • டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஒரு திட்டம் ஆனது இரண்டாவது டிரினிட்டி சேலஞ்ச் போட்டியில், நுண்ணுயிர் எதிர்ப்பாற்றலின் (AMR) அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான பிரிவில் இரண்டாவது பரிசை கூட்டாக வென்று உள்ளது.
  • அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக இந்தியா மாறியுள்ளது.
  • குஜராத்தில் உள்ள ஸ்மிருதிவன் நிலநடுக்க நினைவு அருங்காட்சியகம் ஆனது, 2024 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ பிரிக்ஸ் வெர்செய்ல்ஸ் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • தென்னாப்பிரிக்க வருவாய்ப் பணித் (SARS) தலைவர் எட்வர்ட் கீஸ்வெட்டர் உலக சுங்க அமைப்பு (WCO) சபையின் தலைவர் பொறுப்பிற்கு இரண்டாவது முறையாக ஒரு வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 10வது முறையாக லியோன் மாஸ்டர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளார்.
  • ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாவது மாநாடு ஆனது கத்தாரின் தோஹா நகரில் முதல் முறையாக தலிபான் பங்கேற்புடன் நடந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்