TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 7 , 2024 12 days 88 0
  • இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் உத்தரப் பிரதேசம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது என்பதோடு இது நாட்டின் அழுத்தப்பட்ட உயிரி வாயுவில் (CBG) 24 சதவீதத்தை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது.
  • சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும்  பாரம்பரிய பாலினப் பாத்திரங்கள் மற்றும் மாறா மரபுமுறைகளுக்கு சவால் விடும் வகையில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் கணவர்கள் மற்றும் தந்தைகளும் சமையலறையில் வேலை செய்வது போன்ற பாலின-நடுநிலைப் படங்களை கேரளா அறிமுகப்படுத்தியுள்ளது,
  • பிரான்சின் செயிண்ட்-ட்ரோபஸ் நகரில் நடைபெற்ற 43வது உலக மருத்துவ மற்றும் சுகாதார விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நான்கு ஆயுதப்படை மருத்துவச் சேவை (AFMS) அதிகாரிகள் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
  • மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வரும் வங்கதேச நாட்டவர்களுக்காக மின்னணு கடவுச் சீட்டு வழங்கும் வசதியை இந்தியா தொடங்கவுள்ளது.
  • இந்தியாவானது பிரேசில் மற்றும் இந்தோனேசியாவை விஞ்சி மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக மாறியுள்ளது.
  • திருச்சூரில் உள்ள கல்லிங்கல் தோட்டத்தைச் சேர்ந்த சொப்னா கல்லிங்கல் என்பவர் ICAR-இந்திய இந்திய மசாலா பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்பைஸ் விருதை 2024 பெற்றார்.
  • தாய்லாந்தின் தக் மாகாணத்தில் இந்தியா-தாய்லாந்து 13வது கூட்டு ராணுவப் பயிற்சியான மைத்ரியில் (MAITREE) இந்திய ராணுவம் பங்கேற்கிறது.
    • இந்தப் பயிற்சியின் கடைசிப் பதிப்பானது மேகாலயாவின் உம்ரோயில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது.
  • துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) ராஜிந்தர் கண்ணா கூடுதல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும், புலனாய்வுப் பிரிவின் சிறப்பு இயக்குநர் டிவி ரவிச்சந்திரன் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்