TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 9 , 2024 10 days 83 0
  • AK-203 தாக்குதல் துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட இந்தியா -ரஷ்யா கூட்டுத் துணிகர முதலீட்டு முன்னெடுப்பானது இந்திய இராணுவத்திற்கு 35,000 ஆயுதத் தொகுப்புகளை வழங்கியதன் மூலம் அதன் முதல் கட்டத் தயாரிப்பினை நிறைவு செய்துள்ளது.
  • மாற்றுத் திறனாளி தொழில்முனைவோர்களின் படைப்பாற்றல் மற்றும் திறமையின் தனித்துவமான ஒரு சங்கமமான திவ்ய கலா சக்தி மற்றும் திவ்ய கலா மேளா,  புவனேஸ்வரில் உள்ள KIIT பல்கலைக்கழகத்தில் தொடங்க உள்ளது.
  • பெங்களூரில் சிக்னல்ட்ரான் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் உருவாக்கப் பட்ட முதல் 4G கைபேசி இணைய சேவைக் கட்டுப்பாட்டுத் தளத்தினை இந்திய இராணுவம் சமீபத்தில் பெற்றுள்ளது.
  • அசாமில் உள்ள நரங்கி இராணுவ நிலையத்தினைத் தொடர்ந்து, நெகிழிக் கழிவுகளால் ஆன சாலையைக் கொண்ட நாட்டின் இரண்டாவது இராணுவ நிலையமாக ஜெய்ப்பூர் இராணுவ நிலையம் மாறியுள்ளது.
  • இங்கிலாந்து வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் ரேச்சல் ரீவ்ஸ் பிரிட்டனின் முதல் பெண் நிதியமைச்சர் ஆனார்.
  • இந்திய விமானப்படையானது ரஃபேல் போர் விமானங்களுடன் எகிப்தில் நடைபெற்ற HOPEX எனப்படும் 4வது கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்