இந்து பிரசுரக் குழுமமானது, ‘Samayapuram - The Sacred Seat of Shakti’ என்ற விளக்கப் படப் புத்தகத்தினை (காபி மேசை புத்தகம் ) வெளியிட்டுள்ளது.
சமையலறைப் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக எஃகு மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு BIS தரத்தினை நன்கு இணங்கும் வகையில் தயாரிக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஆனது, ஏர்பஸ் A320 நியோ எனப்படும் முதல் மிகவும் குறுகலான கட்டமைப்பு கொண்ட விமானத்தினை தனது நிறுவனத்தில் இணைத்துள்ளது.
நெகிழிப் பொருட்கள் மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மை (GCPRS) பற்றிய உலகளாவிய மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SERA) மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகியவை விண்வெளிக்கு ஒரு சில அல்லது எந்தவொரு விண்வெளி வீரர்களையும் அனுப்பாத நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கான மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் இந்தியாவை ஒரு பங்குதார நாடாக அறிவித்துள்ளன.
தென் கொரியாவில் பணியமர்த்தப்பட்ட ஒரு எந்திர மனிதப் பணியாளர் சமீபத்தில் எந்தவித செயல்பாடும் இல்லாத நிலையை எட்டியதால், இது முதல்முதலான ரோபோ தற்கொலை என்று அழைக்கப்படுகிறது.
அது படிக்கட்டுகளில் இருந்து தானே கீழே விழுந்ததாக கூறப் படுகிறது.
2023 ஆம் ஆண்டில் சென்னை மண்டலக் கடவுச் சீட்டு அலுவலகம் (RPO) வழங்கிய மொத்தக் கடவுச் சீட்டுகளின் எண்ணிக்கை 5,19,682 ஆகும்.
இது 2022 ஆம் ஆண்டில் 4,74,472 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் 4,72,274 ஆகவும் இருந்தது.