TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 11 , 2024 136 days 192 0
  • இந்து பிரசுரக் குழுமமானது, ‘Samayapuram - The Sacred Seat of Shakti’ என்ற விளக்கப் படப் புத்தகத்தினை (காபி மேசை புத்தகம் ) வெளியிட்டுள்ளது.
  • சமையலறைப் பாதுகாப்பு, தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக எஃகு மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு BIS தரத்தினை நன்கு இணங்கும் வகையில் தயாரிக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
  • டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஆனது, ஏர்பஸ் A320 நியோ எனப்படும் முதல் மிகவும் குறுகலான கட்டமைப்பு கொண்ட விமானத்தினை தனது நிறுவனத்தில் இணைத்துள்ளது.
  • நெகிழிப் பொருட்கள் மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மை (GCPRS) பற்றிய உலகளாவிய மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது.
  • விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SERA) மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகியவை விண்வெளிக்கு ஒரு சில அல்லது எந்தவொரு விண்வெளி வீரர்களையும் அனுப்பாத நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கான மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் இந்தியாவை ஒரு பங்குதார நாடாக அறிவித்துள்ளன.
  • தென் கொரியாவில் பணியமர்த்தப்பட்ட ஒரு எந்திர மனிதப் பணியாளர் சமீபத்தில் எந்தவித செயல்பாடும் இல்லாத நிலையை எட்டியதால், இது முதல்முதலான ரோபோ தற்கொலை என்று அழைக்கப்படுகிறது.
    • அது படிக்கட்டுகளில் இருந்து தானே கீழே விழுந்ததாக கூறப் படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டில் சென்னை மண்டலக் கடவுச் சீட்டு அலுவலகம் (RPO) வழங்கிய மொத்தக் கடவுச் சீட்டுகளின் எண்ணிக்கை 5,19,682 ஆகும்.
    • இது 2022 ஆம் ஆண்டில் 4,74,472 ஆகவும், 2019 ஆம் ஆண்டில் 4,72,274 ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்